பாலியல் புகார்: மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்!

பாலியல் புகார்: மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்!
X

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மகரிஷி வித்யா மந்திர் பள்ளி வணிகவியல் ஆசிரியர்

சென்னையில் மகரிஷி வித்யாமந்திர் பள்ளி ஆசிரியர் பாலியல் புகாரால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பள்ளியை தொடர்ந்து சென்னையில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் மீதும் பாலியல் புகார் எழுந்துள்ளது.

மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான வணிகவியல் பாட ஆசிரியர் ஆனந்தன் பணி இடைநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

முன்னதாக மகரிஷி வித்யா மந்திர் பள்ளி முன்னாள் மாணவர்கள் பாலியல் புகார்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டும், குழந்தைகள் உரிமைக்கான பாதுகாப்பு ஆணையம், மகளிர் ஆணையம், உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் பள்ளி நிர்வாகம் ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளனர். புகார் கொடுத்ததை அடுத்து ஆசிரியர் ஆனந்தனை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!