முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது : திருமாவளவன் வழங்கல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது : திருமாவளவன் வழங்கல்
X

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருதினை விசிக தலைவர் தொல் திருமாவளவன் வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருதினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வழங்கினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா 2021 சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடை பெற்றது..

இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு அம்பேத்கர் சுடர் விருது, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு

பெரியார் ஒளி, பேச்சாளர் நெல்லை கண்ணனுக்கு காமராஜர் கதிர், பி.வி.கரியமாலுக்கு அயோத்திதாசன் ஆதவன் விருது,

பஷிர் அகமதுக்கு காயிதே மில்லத் பிறை விருதும், மொழியிலாளர் இராமசாமிக்கு செம்மொழி ஞாயிறு விருதும் வழங்கப்பட்டது..

விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற விழாவில் அவர் விருதுகளை வழங்கினார். பின்னர் புத்தர் சிலை ஒன்றினை முதல்வருக்கு திருமாவளவன் பரிசளித்தார்.விருது பெற்ற பின் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்டோர் விருது ஏற்புரை ஆற்றினர்..

விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு மற்றும் டி.கே.எஸ் இளங்கோவன் எம்.பி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, ரவிக்குமார், திமுக சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், மயிலை வேலு விசிக சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனை செல்வன், அளுர் ஷா நவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபு உள்ளிட்டோரும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சியிம் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். .

நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது

என்னை தேர்ந்தெடுத்து அம்பேத்கர் விருதை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார் .. அவருடைய அன்புக்கு நான் என்றுமே கட்டுப்பட்டவன் தான். இப்போது பேசிய பேச்சுக்கும் நான் கட்டுப்பட்டவன் இதற்குமேல் எவ்விளக்கவும் கொடுக்கவேண்டியதில்லை,

எனக்கு இவ்விருதினை தருகிறேன் என்று சொன்னபோது எனக்கு அச்சமிருந்தது . அம்பேத்கரின் விருதினை பெரும் அளவிற்கு நான் சாதனை செய்யவில்லை கடமையை தான் செய்தேன்

மாநில ஆதிதிராவிட ஆணையம் , பஞ்சமி நிலம் மீட்பு , அயோத்திதாசர் மணிமண்டபம் என பலவற்றை செய்தாலும் அவற்றை எல்லாம் செய்ய தான் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது..

சட்டமன்றத்தில் எனக்கென்று சாதி பெருமை கிடையாது மிக மிக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவன் நான் பட்டம் பெற்றவன் அல்ல நான் புகுந்ததெல்லாம் ஈரோட்டு பள்ளியும் காஞ்சி பள்ளியும் தான் என்றார் கலைஞர் என்னை மேலும் இச்சமூகத்திற்கு செய்ய ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ளீர்கள்....

கலைஞர் வழி வந்தவன் நான் அவரின் மகன் என்பதில் பெருமைக்கொள்பவன் முதன்முறையாக முதல்வராக கலைஞர் பதவியேற்றபோது ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கென தனித்தனி துறையை உருவாக்கினார்...

ஒரே இரத்தம் என்ற திரைப்படத்தில் கெளரவ வேடத்தில் நான் நடித்தேன் ..நந்தகுமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன்.இறுதியாக நான் தாக்கப்படும் ஒரு பாடல் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியதியதற்கு கிடதைத்த பரிசு என அதை எழுதியவரும் கலைஞர் தான்

அம்பேத்கர் பெயரிலான விருதினை பெரியார் திடலில் வைத்து வாங்குவதில் பெருமை... அம்பேத்கர் போல் இந்தியாவில் யாருமில்லை. அம்பேத்கர் சட்டக்கல்லூரி என பெயரிட்டவர் கலைஞர் அவர்கள் தான்.. மராட்டியத்தை விட அம்பேத்கர் புகழை தமிழகத்தில் பரப்பியது திராவிட இயக்கம் தான்...

பல்வேறு திட்டங்களை கலைஞர் செய்தார் அவருடைய சாதனையின் தொடர்ச்சியாக தான் இவ்வாட்சி நடைபெறுகிறது.. நான் முதல்வராக பதவியேற்றவுடன் ஒரு கூட்டத்தை கூட்டினேன். அமைச்சர்கள், அதிகாரிகளுடான கூட்டத்தில் பேசினேன்...

வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விரைந்து முடிக்கவேண்டும். இவற்றிற்கு மேலும் 4 கூடுதல் நீதிமன்றங்கள். வன்கொடுமை நடக்ககூடாது என்பது எங்கள் தான் கொள்கை .. சமூகபகுபாடுகள் இம்மண்ணில் பேதம் கூடாது இது தாம் திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கை . சட்டத்தினால் அனைத்தையும் திருத்திவிட முடியாது மனமாற்றம் தேவை..

மனமாற்றம் தேவை என்று விட்டுவிடக்கூடாது சட்டங்கள் அதற்கு தேவை... சீர்திருத்தபரப்புகளை நடத்திட வேண்டும்...சமூக நல்லிணக்கம் இல்லாத மாநிலத்தில் மற்ற முயற்சிகள் எல்லாம் வீண் தான்.

சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கவேண்டும் இல்லையென்றால் அவற்றை புறம் தள்ளவேண்டும் என தொழிலதிபவர்கள் மாநாட்டில் சொன்னேன்.

பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கருத்துகளை ஏற்றுக்கொண்டுள்ள நான் அவர்களின் வாழ்க்கையை போல் என் வாழ்க்கைய வடிவமைத்துக்கொள்வேன் என உறுதிக்கொள்கிறேன் என்றார்...

பின்னர் *விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பேசுகையில்*

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சொன்னார்கள் எங்களுக்கும் விசிகவிற்குமான உறவு கொள்கை ரீதியான உறவு என்றார்.திமுகவுடன் நின்றால் தான் பிற்போக்கு சக்திகளை முறியடிக்கமுடியும்.

அகில இந்திய அளவில் பாஜகவிற்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைக்க்கூடிய ஆற்றல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் உள்ளது.. அடுத்த முறை பாஜக வந்தால் நாட்டை காப்பாற்ற முடியாது தமிழகத்திற்கும் இது நல்லதல்ல...

அல்லு சில்லுகளை பற்றி கவலைகொள்ளாமல் அற்பர்களை பற்றி கவலைக்கொள்ளாமல் அகில இந்திய அளவில் நீங்கள் கவனம் கொள்ளவேண்டும்.

காங்கிரஸ் இல்லாத ஒரு அணியை நாம் கட்டினால் அது பாஜகவிற்கு சாதகமாக முடியும் .உங்களை குறைத்து மதிப்பீட்டவர்களை பேரிடியாக தேர்தல் வெற்றி மூலம் பதில் அளித்தவர் முதல்வர்..பெரியார் மடியல் விளையாட, அண்ணாவின் அரவணைப்பில் இருக்க வாய்ப்பு உங்களுக்கு கிடைத்து.வியூகம் அமைப்பதில் கலைஞரை போல் நீங்கள் செயல்படவேண்டும். திமுகவுடன் என்றும் நாங்கள் தோள்கொடுத்து நிற்போம் என்றார்..

*வைகோ பேசுகையில்*

இரண்டாவது விடுதலையை வாங்கி தந்த சிங்கம் நீங்கள் என முதலமைச்சருக்கு நெல்லை கண்ணன் புகழாரம்ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் சமூக நீதியை பாதுகாக்க என்றும் உறுதுணையாக முதல்வர் அவர்கள் இருப்பார்.

அம்பேத்கரும் பெரியாரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் ,பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்தார் முதல்வர் மு க ஸ்டாலின் என்றார்...

*காமராசர் கதிர் விருது பெற்ற* நெல்லை கண்ணன் பேசுகையில்*

இந்த தலைமுறைக்கு உங்களை விட்டால் ஆள் இல்லை..உங்கள் உடல் நலனை பார்த்துக்கொள்ளுங்கள் முதல்வரே. திருமா நீங்களும் உங்கள் நலனைபார்த்துக்கொள்ளுங்கள்..

நீங்கள் முதல்வராக பதிவேற்ற போது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றவுடன் உங்கள் துணைவியார் கண்கலங்கினார் அப்போது நானும் கண்கலங்கி விட்டேன்.நீங்கள் நீண்டகாலம் வாழவேண்டும் என கண்ணீர் மல்க பேசினார்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!