பொங்கல் பண்டிகைக்குப் பிறகு முழு ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பில்லை : அமைச்சர் மா.சுப்ரமணியன்
அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி
சென்னை திருவான்மியூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கருவியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேரில் சென்று வழங்கினார்.
பின்னர் அடையாறு மண்டல அலுவலகத்தில் உள்ள கொரோனா ஆலோசனை மையத்தையும் ஆய்வு செய்தார். அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹாசன் மவுலானா ஆகியோர் உடனிருந்தனர்
ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் தினசரி 2000 என்கிற எண்ணிக்கையில் பாதிப்பு அதிகமாகி வருகிறது. ஆனால் பாதிக்கப்படுபவர்கள் மிதமான தொற்று இருப்பதால் அவர்களை ஐ.சி.எம்.ஆர். ஆலோசனை படி வீட்டிலேயே தனிமைப்படுத்தி வருகிறோம் என் கூறினார்.
வீட்டில் தனிமையில் இருப்பவர்கள் காலை மாலை பல்ஸ் ஆக்ஸ்மீட்டரில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 92 என்ற புள்ளிக்கு கீழ் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்.
சென்னையில் 26 ஆயிரம் பேர் இப்போது கொரோனா சிகிச்சையில் உள்ள நிலையில் இதில் சுமார் 21987 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். தீவிர நுரையீரல் தொற்று, இணை நோய் பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் மட்டும் மருத்துவமனைக்கு வரலாம் எனவும் லேசான அறிகுறிகள் இருப்பவர்கள் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டார்.
அதேபோல், மருத்துவமனைகளில் போதுமான அளவு படுக்கை வசதிகள் உள்ளதாகவும் அவர் கூறினார்.
சென்னையில் வீட்டு தனிமையில் இருப்பவர்களை கண்காணிக்கவும் ஆலோசனை வழங்கவும் 178 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாளை பிரதமர், முதல்வர் தமிழகத்தில் புதிய 11 மருத்துவ கல்லூரியை திறந்து வைக்க உள்ளனர். டெல்லியில் இருந்து பிரதமர் காணொலி மூலம் திறந்து வைப்பார். சென்னை தலைமை செயலகத்தில் நாளை மாலை 4-5 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும் எனவும் இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மும்க ஸ்டாலின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்ஷுக் மாண்டவியா உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் எனவும் கூறினார்.
புதிய 11 மருத்துவ கல்லூரிகளாள் 1450 மாணவர்கள் பயன் பெற உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்
தற்போது உள்ள தொற்று பாதிப்பு எல்லாமே எஸ் ஜீன் பாதிப்பாக இருப்பதால் ஒமிக்ரான் அறிகுறி தான் என்பதால் தனியாக ஒமிக்ரான் பரிசோதனை செய்யப்படுவதில்லை என கூறினார்.
ஆனால் புதிய வைரஸ் எல்லாம் பரவுகிறது என்று சொல்வதால் அதிக பாதிப்புள்ள கிளஸ்டர் ஏரியாக்களில் மட்டும் பாதிப்புகளை பரிசோதனைக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.
மக்களின் வாழ்வாதாரம், பாதிக்கப்பட கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார் அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிர ஆலோசித்து முடிவு எடுக்கிறார்.மக்கள் ஒத்துழைப்பால் கொடுத்தால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் வராது. பொங்கலுக்கு பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கு இருக்க வாய்ப்பு இல்லை என கூறினார்.
பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் 15-ம் தேதி சனிக்கிழமை என்பதால் இந்த வாரம் மெகா தடுப்பூசியை நடத்தாமல் அடுத்த வாரம் சனிக்கிழமை நடத்தலாமா என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவு அது குறித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu