முழு ஊரடங்கிலும் மெட்ரோ ரயில்கள் இயங்கும் - மெட்ரோ நிர்வாகம் அறிவுப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால், இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் சூழலில், நாளை முழு ஊரடங்கும் வழக்கம் போல் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ரயில்கள், பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகள் இயங்காது என்றும் வாக்கு எண்ணிக்கைக்காக செல்லும் முகவர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், முழு ஊரடங்கின் போதும் மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்று, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ரயில்கள் இயக்கப்படும் என்றும், விம்கோ நகர் - விமான நிலையம் இடையே 1 மணி நேரத்துக்கும் ஒரு முறையும் சென்ட்ரல் – விமான நிலையம் இடையே 2 மணி நேரத்துக்கு ஒரு முறையும் ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu