நாளை முதல் சனிக்கிழமை வரை வீடு தேடி தடுப்பூசி திட்டம்

நாளை முதல் சனிக்கிழமை வரை வீடு தேடி தடுப்பூசி  திட்டம்
X
அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி ( பைல் படம்)
சென்னையில் நாளை முதல் சனிக்கிழமை வரை வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அமைச்சர். மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

மக்கள் அனைவரும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையில், நாளை முதல் சனிக்கிழமை வரை வீடு தேடி தடுப்பூசி என்ற திட்டம் செயல்படுத்த இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை 9வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

வெள்ள நிவாரணப் பணிகளில் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுவது போல மக்கள் நினைப்பதாக தெரியவில்லை என்றும், எனவே அவர்கள் கூறுவதை கண்டுகொள்ளாமல் பணிகளை தொடர வேண்டும் என பாடலாசிரியர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.*

சென்னை சைதாப்பேட்டை சாமியார் தோட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெற்றித் தமிழல் பேரவை சார்பில் அரிசி, பருப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், நேற்று முன் தினம் 5000 மருத்துவ முகாம் தொடங்கி வைத்துள்ளதாகவும்,1500 வாகனங்களில் மருத்துவ முகாம் நடைபெற்று வருவதாகவும், இதன்மூலம் நேற்று வரை ஏழரை லட்சம் பேர் மழை காலங்களில் ஏற்படும் நோயினால் சிகிச்சை பெற்று பயனடைந்து உள்ளதாக குறிப்பிட்டார்.

சென்னையில் வீடுகளை தேடி சென்று மழை பாதிப்புக்கான மருத்துவ திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக கூறிய அமைச்சர், உறுப்பு தானம் யார் தருகிறார்கள் என்பதை கண்டறிய தான் ஆதார் கட்டாயம் என்று கூறியுள்ளதாக தெரிவித்தார்.

தடுப்பூசி பொறுத்தவரை தமிழகத்தில் இதுவரை 73 % பேர் முதல் தவணையும், 35% பேர் இரண்டாம் தவணையும் செலுத்தி உள்ளதாகவும், இன்னும் 50 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளதாகவும் கூறினார்.

எனவே இரண்டாம் தவணை செலுத்திக்கொள்ள வேண்டும் என்பதை அதிகரிக்கும் வகையில், நாளையில் இருந்து சனிக்கிழமை வரை வீடு தேடி தடுப்பூசி என்ற திட்டம் செயல்படுத்த இருப்பதாக கூறிய அமைச்சர், வரும் ஞாயிற்றுக்கிழமை 9வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

*தொடர்ந்து வைரமுத்து பேசுகையில்,*

தன்னுடைய உழைப்பால், செயலால் மழை பாதிப்பை மு.க.ஸ்டாலின் சிறப்பாக கையாண்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே மக்களும், ஊடகங்களும் கூறும் சிறு குறைகளையும் அவர் கவனித்து சரி செய்வார் என்றார்.

வெள்ள நிவாரணப் பணிகளில் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுவது போல மக்கள் நினைப்பதாக நான் நினைக்கவில்லை என்றும், சில குறைகள் சொன்னால் தான் நிறைகள் கண்ணுக்கு தெரியும் என்று அவர்கள் கூறியிருக்கலாம், எனவே அவற்றை கண்டுகொள்ளாமல் பணிகளை தொடர வேண்டும் என்றும் பேசினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!