3 மாதங்களுக்கு பிறகு களைகட்டியது சென்னை உள்நாட்டு விமான நிலையம்!

3 மாதங்களுக்கு பிறகு களைகட்டியது சென்னை உள்நாட்டு விமான நிலையம்!
X
3 மாதங்களுக்கு பிறகு விமானங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சென்னை உள்நாட்டு விமான நிலையம் மீண்டும் கலைகட்டத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தொற்று பீதியால் பயணிகள் எண்ணிக்கை கடந்த ஏப்ரலில் வெகுவாக குறைந்து இருந்தது. இதனால் விமான சேவைகளும் குறைக்கப்பட்டது.

முன்னதாக 70 விமானங்கள் வரை இயக்கப்பட்டு சுமார் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேர் வரை மட்டுமே பயணித்தனர். போதிய பயணிகள் இல்லாமல், தினமும் 90 விமானங்கள் வரை ரத்து செய்யப்பட்டது.

தமிழகத்தில் தொற்று குறைய தொடங்கியதையடுத்து சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 வாரங்களாக பயணிகள் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியது .

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் மே இறுதி வாரத்தில் புறப்பாடு விமானங்கள் 40, வருகை விமானங்கள் 40 என மொத்தம் 80 விமானங்கள் இயக்கப்பட்டு அதில் 4 ஆயிரம் பேர் மட்டுமே பயணித்தனர். தற்போது புறப்பாடு விமானங்கள் 51 ஆக அதிகரித்து, வருகை விமானங்கள் 53 என மொத்தம் 104 விமானங்களாக உயர்ந்துள்ளது.

அதைப்போல் பயணிகள் எண்ணிக்கையும் 5 ஆயிரத்திற்கும் மேல் சென்றது, 3 மாதங்களுக்கு பிறகு இன்று சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் விமானங்களின் எண்ணிக்கை 100யை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!