சென்னை: நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை: நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!
X

நடிகர் அஜிகுமார்.

சென்னையில் உள்ள நடிகர் அஜித் குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவருக்கு சொந்தமான சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனையடுத்து, சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், தான் ராயப்புரத்தை சேர்ந்த விக்கி என்றும், நான் நடிகர் அஜீத்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.

இதன் பின்னர் விழுப்புரம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விழுப்புரம் போலீசார் மிரட்டல் விடுத்த நபரை குறித்து விசாரணை செய்ததில் அவர் முக்கிய நபர்களின் வீடுகளில் அடிக்கடி தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தவர் என்பது தெரியவந்தது.

இதனால் பலமுறை கைதாகி சிறைக்கு சென்று வந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்தனர். அவரை கைது செய்யும் முயற்சியில் காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!