மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை

மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர்  வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
X
மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்து வருபவர் வெங்கடாசலம். இவரது வீடு மற்றும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து வெளியான முதல்கட்ட தகவலின்படி, ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரியான வெங்கடாசலம், கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது வரை அவர் தான் இதே பொறுப்பில் இருந்து வருகிறார். இவர் பணியில் இருக்கும்போது விதிமுறையை மீறி சொத்துகள் சேர்த்ததாக தகவல் ஒன்று லஞ்ச ஒழிப்பு துறைக்கு கிடைக்கப்பெற்றது. அந்த தகவலின் அடிப்படையில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனையில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அலுவலகத்தில் மதியம் 12 மணிமுதல் இந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல, வேளச்சேரியில் உள்ள அவரின் இல்லத்திலும் சோதனை நடைபெற்றதாக தெரிகிறது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil