12 ஆயிரம் வெப்ப பரிசோதனை கருவி வழங்கும் விழா : அமைச்சர் மா.சுப்ரமணியன் பங்கேற்பு
அமைச்சர் மா. சுப்ரமணியன் பேட்டி
Project hope , SARD எனும் இரு தொண்டு நிறுவனங்கள் சார்பில் 1கோடியே 50 லட்சம் மதிப்பிலான வெப்ப பரிசோதனைக் கருவிகள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் வரங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியதாவது.
'மக்கள் நலப்பதிவு ஏடு ' பணி முழுமையடைந்தால் உலகளவில் முதன் முறையாக இந்த பதிவை மேற்கொண்ட மாநிலமாக தமிழகம் மாறும். தமிழகத்தில் குடும்ப அட்டைகளில் பெயர் உள்ள 6 கோடியே 57 லட்சத்து 39,783 நபர்களின் குடும்ப உறுப்பினர்களின் நோய் பாதிப்பு நிலவரம் மக்கள் நலப்பதிவேடு மூலம் தெரிய வரும். இப்பதிவேடு மூலம் அனைவரது உடல் எடை , உயரம் , ரத்த அழுத்தம் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும்.
30 நிறுவனங்களின் மூலம் பதிவேடு தயாரிக்கும் பணி தொடங்க உள்ளது. விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் 79 ஆயிரம் பயனாளிகளுக்கு சோதனை முயற்சியாக பதிவேட்டு பணி தொடங்கியுள்ளது.
வரும் ஜனவரியில் தொடங்கி 2022 ஜூன் இறுதிக்குள் அதாவது தொடங்கிய 6மாதத்தில் மக்கள் நலப் பதிவேடு பணி நிறைவடையும். மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் 41லட்சத்து 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்பெற்றுள்ளனர்.
இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் கடந்த 5 நாளில் 698 நபர்களுக்கு விபத்து சிகிச்சை வழங்கப்பட்டது , அரசுக்கு சிகிச்சை செலவு 60 லட்சத்து 50,900 ரூபாய் செலவாகியுள்ளது. சிகிச்சை பெற்ற 20 விழுக்காட்டினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டோர்.
தமிழகத்தில் தினசரி விபத்து இறப்பு விழுக்காடு 50-60 நபர்கள் , மாத சராசரி 1600 முதல் 1700 நபர்கள் . இன்னுயிர் காப்போம் மூலம் அடுத்த ஓராண்டில் விபத்து இறப்பு பாதியாக குறையும் .
'மக்களைத் தேடி மருத்துவம் ' திட்டத்தின் மூலம் நீரிழிவு , உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் வீடு தேடிச் சென்று மருந்துகளை வழங்கும் பணியாளர்கள் கூடுதலாக காய்ச்சல் பரிசோதனையையும் மேற்கொள்ளும் விதமாக 12ஆயிரம் வெப்ப பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சயின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- ஹை ரிஷ்க் 12 நாடுகளில் இருந்து வந்தோரில் 15, 250 நபர்களுக்கு பிசிஆர் மேற்கொள்ளப்பட்டது , மொத்தம் 57 நபர்களுக்கு s ஜீன் மரபியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மத்திய வைராலஜி ஆய்வுக் கூடத்தில் நேற்றிரவு 60 பேர் மாதிரி சோதிக்ப்பட்டு 33 நபர்களுக்கு ஒமைக்ரான் உறுதியாகியுள்ளது. அதில் 30 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், மத்திய அரசின் வைராலஜி ஆய்வு முடிவு மூலம் தமிரகத்தில் 33 நபர்களுக்கு தமிழத்தில் ஒமைக்ரான் உறுதியாகியுள்ளது
பாதிக்கப்பட்டுள்ள 34 பேருக்கும் அறிகுறியற்ற நிலையில் ஒமிக்ரான் , தலைசுற்கல் , தொண்டை அடைப்பு போல மிதமான பாதிப்புதான். ஒமிக்ரானில் 26 பேர் சென்னையில் சிகிச்சை மாதிரி அனுப்பப்பட்ட 57 பேரில் 34 பேருக்கு முடிவு வந்துள்ளது , 23 பேரின் முடிவு வர உள்ளது. ஒமிக்ரான் பாதிக்கப்பட்டோரின் தொடர்பில் இருந்த 4275 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒமிக்ரான் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தோர் 4அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் கண்காணிப்பு..
நாம் மேற்கொண்ட பரிசோதனையில் S ஜூன் மாறுபாடு கண்டறியப்பட்டதன் மூலம் ஏறக்குறைய இவர்களுக்கு ஒமிக்ரான் இருக்கலாம் என ஏற்கனேவே முடிவு செய்து விட்டோம் , மத்திய அரசு வைராலாஜி கூடம் மூலம் முடிவு வந்த நிலையில் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கிறோம்.
சென்னையில் 26 நபர்கள் , சேலம் 1 நபர் , கேரளாவில் 1 நபர் , மதுரை 4 , திருவண்ணாமலை 2 பேர் சிகிச்சையில் உள்ளனர் ,
ஒமிக்ரான் பாதிக்கப்பட்டோரில் 18 வயதுக்கு கீழ் உள்ள இருவர் தவிர அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் " என்று கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu