கார் டாக்சிகள் ஆம்புலன்ஸ் ஆக மாற்றம்

கார் டாக்சிகள் ஆம்புலன்ஸ் ஆக மாற்றம்
X
-சென்னை மாநகராட்சியின் சிறப்பு நடவடிக்கை

சென்னையில் ஆம்புலன்ஸ்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், லேசான அறிகுறி உள்ளவர்களை கொரோனா சிகிச்சை மையங்களுக்கு அழைத்து செல்ல கார் ஆம்புலன்ஸ்களை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக 250 கால் டாக்சிகளை, ஆம்புலன்ஸ்களாக மாற்றியுள்ளது.இந்த சேவையை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 50 கார் ஆம்புலன்ஸ்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சுவாமிநாதன் கூறும்போது, ஊரடங்கால் வேலைவாய்ப்பின்றி இருந்த நிலையில், மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ள கார் ஆம்புலன்ஸ் சேவை, தங்களுக்கு பொருளாதார ரீதியாக உதவுவதாக ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர் என்றுக் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!