சுங்கக்கட்டணம் மேலும் உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி

சுங்கக்கட்டணம் மேலும் உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி
X
தமிழகத்தில் மேலும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடி கட்டணம் ஏற்கனவே அதிகமாக இருக்கும் நிலையில், தற்போது மேலும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

தமிழகத்தில் சென்னை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, கப்பலூர், சாத்தூர் உள்ளிட்ட 26 சுங்கச்சாவடிகளில் ஐந்து ரூபாய் முதல் 30 ரூபாய் வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. உயர்த்தப்பட்ட புதிய கட்டணம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஏற்கனவே பீதியை கிளப்பி உள்ள நிலையில் சுங்க கட்டண உயர்வு எல்லாம் மக்கள் தலையிலேயே சுமையாக விழும் என்று மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!