பொது இடங்களில் புகையிலைப் பொருட்கள்: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
எம்பி அன்புமணி ராமதாஸ் ( பைல் படம்)
புகையிலைப் பயன்பாடு காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளும், செயல்பட முடியாத அளவுக்கு மனிதர்களை முடக்கும் நோய் பாதிப்புகளும் இந்தியாவில்தான் மிகவும் அதிகமாக உள்ளன. புகையிலைப் பயன்பாடு காரணமாக, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 13.5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். புகைப் பிடித்தல், புகையில்லாத புகையிலைப் பொருட்கள் பயன்பாடு, மற்றவர்கள் புகைத்துவிடும் புகையை சுவாசித்தல் போன்றவற்றால் இந்திய இளைஞர்களும் மாணவர்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
மனிதர்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் 6 முதல் 8 முக்கிய நோய்களுக்கும், புற்றுநோய், இதய நோய்கள், நுரையீரல் நோய்கள் உள்ளிட்ட 40% தொற்றா நோய்களுக்கும் புகையிலைப் பயன்பாடுதான் முதன்மைக் காரணமாகத் திகழ்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
புகையிலைப் பொருட்களின் உறைகளில் 85% அளவுக்கு எச்சரிக்கைப் படங்களை வெளியிட்டதன் மூலம் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், புகையிலைப் பயன்பாட்டைக் குறைப்பதற்காகவும் நீங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கவை.
சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து கடந்த ஜனவரி 31ஆம் தேதி அப்போதைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருப்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
20 விழுக்காட்டினர் 2019ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட உலக இளைஞர் புகையிலைப் பயன்பாட்டு ஆய்வில் கிடைத்த புள்ளிவிவரங்களின்படி, மாணவர்களில் 29.5 விழுக்காட்டினர் மற்றவர்கள் புகைத்துவிடும் புகையை சுவாசிப்பதால் பாதிக்கப்படுகின்றனர்.
இவர்களில் அதிகபட்சமாக 23.4 விழுக்காட்டினர் திறந்தவெளி பொது இடங்களிலும், 21.2 விழுக்காட்டினர் அரங்கம் போன்ற மூடப்பட்ட பொது இடங்களிலும், 11.2 விழுக்காட்டினர் வீடுகளிலும் இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.
ஆகவே பொது இடங்களில் புகையிலை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று எம்.பி.அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu