சுடுகாட்டில் எங்களை வீசுங்கள் - சீமான் ஆவேசம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் பரபரப்பான சூழலை எட்டியுள்ளது. இந்நிலையில், போரூர், திருவொற்றியூர் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:
திமுக, அதிமுக.,விடம் தொலைநோக்கு திட்டங்களே இல்லை. சலுகை மானியம் கொடுப்பதே இரு கட்சிகளின் வேலை. மழைநீரை சேமிப்பதற்கான திட்டங்கள் கூட இரு கட்சிகளிடம் இல்லை.சீமானுக்கு ஓட்டுப்போடுங்கள். உதயசூரியனுக்கும், இரட்டை இலைக்கும் ஓட்டு போட்டால் எங்களை சுடுகாட்டில் வீசுங்கள்.
சீமானுக்கு ஓட்டு போட்டால், ஒரு ஓட்டு வீணாகி விடப்போகிறதா?எந்த முதல்வருக்கு சாராய ஆலை உள்ளது. இவர்களுக்கு உள்ளது. முதல்வரை தேர்வு செய்யவில்லை. சாராய ஆலை முதலாளிகளை தேர்வு செய்கின்றனர்.
தமிழகத்தில் பணம் கொடுக்காமல் தனக்கு மட்டுமே கூட்டம் கூடுகிறது. எனவே உண்மையிலேயே நான் தான் பிக்பாஸ் என்று பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu