நிலக்கரி இறக்குமதியில் ஊழல் : திமுக எம்பி குற்றச்சாட்டு

நிலக்கரி இறக்குமதியில்  ஊழல் :  திமுக எம்பி  குற்றச்சாட்டு
X
நிலக்கரி இறக்குமதியில் பல கோடி ஊழல் நடந்து இருப்பதாக திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி ஆளும்கட்சி மீது குற்றச்சாட்டியுள்ளார்.

சென்னையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி அளித்த பேட்டி:

அதிமுக ஆட்சியில் கடந்த 2011 முதல் 2016 வரையில், மின்சார வாரியத்தில் பல்வேறு ஊழல்கள் நடந்து உள்ளது. விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி பணிக்கு கான்ட்ராக்டர் கேட்டது வெறும் 236.57 கோடி தான்.

ஆனால், கான்ட்ராக்டருக்கு இவர்கள் கொடுத்தது 1,267 கோடியே 49 லட்சம். கூடுதலாக கொடுக்கப்பட்ட பணம் எங்கே சென்றது என்று ஆடிட்டிங்கில் கேட்கிறார்கள். இதற்கு மின்வாரிய சேர்மன் இதை நீங்கள் எல்லாம் கேட்கக்கூடாது. அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நாங்க இதைவிட்டு விட்டோம் என்று கூறி வருகிறார்.

இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று சிஏஜி மின்வாரியத்தை அறிவுறுத்தியது. இதை டிராப் பண்ணுங்க என்று மின்வாரியத்தின் சேர்மன் கேட்டதற்கு இணங்க இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்று மின்வாரிய நிலக்கரி இறக்குமதி ஊழல் குறித்து ஆளும்கட்சி மீது குற்றச்சாட்டியுள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!