வீடு புகுந்து செல்போன், லேப்டாப் திருடிச் சென்ற இளைஞர் கைது

வீடு புகுந்து செல்போன், லேப்டாப் திருடிச் சென்ற  இளைஞர் கைது
X

கைது செய்யப்பட்ட ஆனந்த்.

திருவொற்றியூரில் வீடு புகுந்து செல்போன் மற்றும் லேப்டாப் திருடிச் செல்லும் இளைஞரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

திருவொற்றியூர் தாங்கல் பீர் பைல்வான் தர்கா ரோடு பகுதியில் வசித்து வருபவர் அப்துல் உசேன் (33). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 26 தேதி இரவு தனது வீட்டின் மொட்டை மாடியில் தூங்கி விட்டு அதிகாலை 6 மணிக்கு எழுந்து வீட்டில் வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு திறந்து இருப்பதையும், டேபிளில் வைத்திருந்த லேப்டாப், மற்றும் விலை உயர்ந்த மூன்று செல்போன்கள் காணமல் போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இச்சம்பவம் குறித்து உடனடியாக திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவொற்றியூர் உதவி ஆணையர் முஹமது நாசர் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவம் நடைபெற்ற இடத்தில் சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது திருட வந்த நபர் அணிந்திருந்த லுங்கியை முகத்தை மறைத்துக் கொண்டு தெருவில் நடந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி நகர் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (27) என்பது தெரியவந்தது. இதனையடுத்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பதுங்கி இருந்த ஆனந்தை, தனிப்படை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து விலை உயர்ந்த மூன்று செல்போன்கள் மற்றும் லேப்டாப் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!