சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தாய்மாமன் உட்பட இருவர் கைது

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தாய்மாமன் உட்பட இருவர் கைது
X

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட இருவர்.

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தாய்மாமன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவர் தனக்கு பிறந்த பெண் குழந்தையை சாந்தி கணவர் இறந்ததால் தம்பி தேசப்பனிடம் 1 வயது பெண் குழந்தையை வளர்ப்பதற்காக 2001ம் ஆண்டு கொடுத்துள்ளார்.

இந்நிலையில் பெண் குழந்தையின் தாய் மாமாவான தேசப்பன் அச்சிறுமியின் ஒன்பதாவது வயதில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அச்சிறுமி வீட்டிலிருந்து வெளியேறி பிராட்வேயில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு வளர்ந்து வந்த நிலையில் 13 வயதானவுடன் மீண்டும் குழந்தைகள் காப்பகத்தில் இருந்து தாய்மாமன் தேசப்பன் மற்றும் அவருடைய மனைவி ரேவதி இருவரும் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

அப்பொழுது அச்சிறுமியை தாய் மாமா தேசப்பன் மீண்டும் பாலியல் தொந்தரவு கொடுத்து கர்ப்பமாகியுள்ளார். உரிய வயது இல்லாத காரணத்தால் கர்ப்பத்தை கலைத்ததாக கூறப்படுகிறது. அதைப்போல் அந்த சிறுமியை தனது நண்பர்களுக்கும் விருந்தாக்கி உள்ளார். இச்சம்பவங்கள் அறிந்த தேசப்பனின் மனைவி மற்றும் சிறுமியின் தாய் ஆகியோர் நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காத்துள்ளனர். தேசப்பனின் மனைவி சிறுமியை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தி உள்ளார்

இந்த நிலையில் சென்ற வருடம் வேறு ஒரு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது குழந்தைகள் நல குழுமத்தில் உள்ளவர்களிடம் சிறுமி தனது சிறுவயதில் இருந்து நடந்த கொடுமைகளை நீதிபதிகளிடம் கூறவே அதனைத் தொடர்ந்து மீண்டும் குழந்தைகள் நலக் குழுமத்தின் சார்பாக ராயபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சிறுமியின் வழக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் மணிமேகலை தலைமையில் இந்த வழக்கில் தாய் சாந்தி மற்றும் தாய்மாமன் மனைவி ரேவதி மற்றும் தவறுகள் நடந்தது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்த குழந்தைகள் நல குழு உறுப்பினர் இஸபெல் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் அச்சிறுமியின் தாய் மாமா தேசப்பன் என்பவர் வியாபார ரீதியாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கேரளாவிற்கு சென்று இருந்த நிலையில் சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் கேரளாவிற்கு விரைந்து சென்று தேசப்பனை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்

மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய ரமேஷ் என்ற விஜயகுமாரையும் (வயது33 )கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் சுந்தரவதனம் மற்றும் உதவி ஆணையாளர் உக்கிரபாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளி தேடி வருகின்றனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா