பருத்தியை அத்தியாவசிய பொருட்களில் மீண்டும் சேர்க்க வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

பருத்தியை அத்தியாவசிய பொருட்களில் மீண்டும் சேர்க்க வியாபாரிகள் சங்கம் கோரிக்கை
X

சிங்காரத் தோட்டம் ரெடிமேட் வியாபாரிகள் சங்கத்தினர்

பருத்தியை அத்தியாவசிய பொருட்களில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று ரெடிமேட் மற்றும் கட்பீஸ் வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை

திருவொற்றியூர் அடுத்த பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சிங்காரத் தோட்டம் ரெடிமேட் வியாபாரிகள் சங்கத்தினர் கூறியதாவது: துணிகளின் விலை நாளுக்கு நாள் ஏறி வருவதால் வியாபாரிகள் வாடிக்கையாளரிடம் பதில் கூற முடியாமல் கஷ்டப்படுகின்றனர். இதற்கு மூல காரணமான பருத்தியின் விலை நாளுக்குநாள் ஏறி வருவதே காரணம் என்று குற்றம் சாட்டினர்

மேலும் பருத்தியை கடந்த 2021ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அத்தியாவசிய பொருட்களில் இருந்து நீக்கிய பிறகு தற்பொழுது வரை பருத்தியின் விலை நாளுக்குநாள் ஏறி வருவதால் பருத்தியை மூல ஆதாராமாக கொண்டு தயாரிக்கப்படும் துணிகளின் விலையும் ஏறி வருகிறது

துணிக்கடைகளில் இன்று விற்கக்கூடிய துணிகளின் விலை 100 ரூபாய் என்றால் மறுநாள் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது இதனால் வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் பதில் பேச முடியாமல் தவித்து வருகின்றனர். இதுபோன்று நாளுக்கு நாள் ஏறிவரும் விலைவாசியை கட்டுப்படுத்த பருத்தியை அத்தியாவசிய பொருட்களில் பட்டியலில் மீண்டும் சேர்க்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்