கள்ளக்காதலனை வைத்து கணவனை கொல்ல முயற்சி செய்த மனைவி உட்பட 3 பேர் கைது

கள்ளக்காதலனை வைத்து கணவனை கொல்ல முயற்சி செய்த மனைவி உட்பட 3 பேர் கைது
X

கள்ளக்காதல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மூவர்.

கள்ளக்காதலனை வைத்து கணவனை கொல்ல முயற்சி செய்த மனைவி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் பகுதியில் வசிக்கும் மணிமாறன் (வயது 42 )என்பவர் அதே பகுதியைச் சார்ந்த அபிமுனிசா என்பவரை கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக அபிமுனிசா மணிமாறனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தபொழுது வேறு ஒரு நபரான யுவராஜுடன் கள்ள தொடர்பில் சேர்ந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது

இந்நிலையில் அபிமுனிசா தனது கள்ளக்காதலன் யுவராஜிடம் தனது கணவர் மணிமாறன் தன்னிடம் அவ்வப்பொழுது தகராறில் ஈடுபடுவதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த யுவராஜ் தனது ஆதரவாளர் ராம்குமார் உடன் சேர்ந்து நேற்று இரவு மணிமாறனை திருச்சினாங்குப்பம் பகுதியில் பைபர் படகை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அவரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு மணிமாறனை கீழே கிடந்த சுத்தியலை எடுத்து தலையில் அடித்ததாக கூறப்படுகிறது

இதனால் மணிமாறன் அலறி அடித்து சத்தம் போட்டதை தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்

இச்சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபிமுனிசா கள்ளக்காதலன் யுவராஜ் மற்றும் ராம்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!