மழைநீர் வடிகால் பணிகளை தமிழக முதலமைச்சர் பார்வையிட்டார்

மழைநீர் வடிகால் பணிகளை  தமிழக  முதலமைச்சர் பார்வையிட்டார்
X

சென்னை, மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை தமிழக முதலமைச்சர் பார்வையிட்டார்.

சென்னை, மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை தமிழக முதலமைச்சர் பார்வையிட்டார். மண்டலம் 2 வார்டு 16ல் உள்ள பகுதிகளில் பத்து கிலோமீட்டர் 43 கோடி செலவில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. அதைப்போல் திருவெற்றியூர் மேற்கு பகுதி 4 வார்டு உட்பட்ட பகுதிகளில் 145கோடி செலவில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் பணிகளை தமிழக முதலமைச்சர் பார்வையிட்டார். மணலி புதுநகர் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

பின்னர், பருவ மழையால் கொசஸ்தலை ஆற்றின் கரை மூழ்கி வெள்ள நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட மகாலட்சுமி நகர், வடிவுடையம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் பாதிப்பு ஏற்படாத வகையில், பொதுப்பணித்துறையினரால் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கரைகள் பலப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டதை அவர் ஆய்வு செய்தார்.அடுத்து வரும் பருவ மழைக்குள் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அப்போது மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு, வட சென்னை எம். பி. கலாநிதி வீராசாமி எம். எல். ஏ. க்கள் மாதவரம் சுதர்சனம் திருவொற்றியூர் கே.பி.சங்கர் பொன்னேரி துரை.சந்திரசேகர், திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி. மு. தனியரசு, மணலி மண்டல குழு தலைவர் ஏ. வி. ஆறுமுகம், மற்றும் திருவொற்றியூர் மண்டல செயற்பொறியாளர் பால் தங்கதுரை உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், நந்தகோபால் . சிவக்குமார்.மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!