ஓடும் ரயிலிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை

ஓடும் ரயிலிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை
X

துர்கா தேவி.

திருவொற்றியூரில் ஓடும் ரயிலிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவொற்றியூர் அடுத்த எண்ணூர் கொசஸ்தலை ஆற்றின் மேம்பாலம் மேல் செல்லும் மின்சார ரயிலின் தண்டவாளத்தில் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்து இளம்பெண் ஒருவர் திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து சக பயணிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலைய காவலர்கள் கொசஸ்தலை ஆற்றுப் பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் சிறிது நேரம் கழித்து இளம் பெண்ணின் உடல் எண்ணூர் கொசஸ்தலை ஆற்றின் ஓரமாக கரை ஒதுங்கியது. அதனைத்தொடர்ந்து எண்ணூர் காவல் நிலைய காவலர்கள் மற்றும் எண்ணூர் தீயணைப்பு துறை வீரர்கள் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் பொன்னேரி பகுதியைச் சார்ந்த துர்கா தேவி (23) என்பதும் இவர் பொன்னேரி பகுதியில் டெய்லராக பணிபுரிந்து வந்துள்ளார். சில மாதங்களாக கும்மிடிப்பூண்டியில் இருக்கும் வாலிபரை காதலித்து வந்ததாகவும், வாலிபர் தான் தற்போது வறுமையில் இருப்பதாகவும் அதனால் தற்போது திருமணம் வேண்டாம் என்று கூறி காதலை மறுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மனமுடைந்த துர்காதேவி கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி சென்று கொண்டிருந்த கொண்டிருந்த மின்சார ரயிலில் ஏரி திடீரென மனமுடைந்து ஓடும் ரயிலில் இருந்து எண்ணூர் கொசத்தலை ஆற்றுப்பகுதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக எண்ணூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story