எண்ணூர் விரைவுச் சாலையில் 4 அடி உயரத்தில் திடீர் பள்ளம்

எண்ணூர் விரைவுச் சாலையில் 4 அடி உயரத்தில் திடீர் பள்ளம்
X

எண்ணூர் விரைவுச் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்.

திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையில் 4 அடி அளவில் சாலை நடுவிலே ஏற்பட்ட மெகா பள்ளத்தல் விபத்தை தடுக்கும் வகையில் போக்குவரத்து ஆய்வாளர் பேரிகார்டு அமைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையில் எல்லையம்மன் கோவில் அருகே உள்ள பேங்க் காலனி சர்வீஸ் சாலையில் ஏற்பட்ட 4 அடி ஆழத்தில் திடீரென பள்ள ஏற்பட்டது.

அப்பகுதியில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவார்கள். சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் இருசக்கர வாகனம் கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதால் இரவு நேரங்களில் சாலையில் உள்ள பள்ளம் தெரியாததால் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

விபத்துக்கள் தவிர்க்கும் விதமாக திருவொற்றியூர் போக்குவரத்து ஆய்வாளர் அப்பளத்தை சுற்றி பேரிகார்டு அமைத்து சர்வீஸ் சாலையில் செல்லும் வாகனங்களை முக்கிய சாலையில் செல்லும்படி போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தினர்.

எனவே எண்ணூர் திருவொற்றியூர் விரைவுச்சாலை அதிகாரிகள் கண்டுகண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai marketing future