திருடப்பட்ட செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டது

திருடப்பட்ட செல்போன்கள்  மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டது
X

மீட்கப்பட்ட செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

பல்வேறு பகுதியில் திருடப்பட்ட செல்போன்களை சைபர்கரைம் அதிகாரிகள் உதவியுடன் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டது

திருவொற்றியூர் சுற்று வட்டார பகுதியில் வீடுகளில் இரவு நேரங்களில் கொள்ளையடிக்கப்பட்ட செல்போன் மற்றும் நடந்து செல்வோரிடம் பறித்துச் சென்ற செல்போன்கள் உள்ளிட்டவை கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான திருடப்பட்ட செல்போன்களை சைபர்கிரைம் உதவியுடன் மீட்டு உரியவர்களிடம் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் உதவி ஆணையாளர் முகம்மது நாசர் ஒப்படைத்தார்

உடன் திருவொற்றியூர் காவல் நிலைய குற்ற பிரிவு ஆய்வாளர் சிதம்பர பாரதி மற்றும் புதுவண்ணாரப்பேட்டை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பீர்பாட்ஸா ஆகியோர் உடன் இருந்தனர்

40 செல்போன்களில் 20 செல்போன் திருவொற்றியூர் பகுதியைச் சார்ந்தவர்களிடமும் புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 20 நபர்களின் செல்போன்களையும் உரிய நபர்களிடம் ஒப்படைத்தனர். செல்போன்களின் இஎம்ஐ நம்பரை கொண்டு சைபர் கிரைம் உதவியுடன் வெளிமாவட்டங்களில் பயன்படுத்திய நபர்களை தொடர்புகொண்டு அவர்களிடம் இருந்து செல்போன்கள் திருடப்பட்ட விவரங்களை எடுத்துக் கூறி அவர்களிடம் இருந்து செல்போனை திரும்பப் பெற்று உரிய நபர்களிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்

மேலும் திருவொற்றியூர் காவல் நிலைய உதவி ஆணையாளர் கூறுகையில் தற்பொழுது போதைப்பொருட்களின் பழக்கம் இளைஞர்களிடம் அதிகமாக உருவாகியிருப்பதால் தங்களது குழந்தைகள் தவறு செய்தால் உடனடியாக கன்டறிந்து அவர்களை திருத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!