கண்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் பலி

கண்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் பலி
X

விபத்தில் பலியான அண்ணன் - தங்கை. 

திருவொற்றியூர் அருகே, கண்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற அண்ணன் - தங்கை இருவர் உயிரிழந்தனர்.

சென்னை மணலி எம் எப் எல் சந்திப்பில் கன்டெய்னர் லாரி ஒன்று தாறுமாறாக ஓடி எதிரில் நின்ற மற்றொரு கன்டெய்னர் லாரியில் மோதியது. அப்போது, லாரியில் இருந்த கண்டைனர் சரிந்து கீழே விழுந்தது. இதில், சென்னை ராயபுரத்தில் இருந்து மணலிபுதுநகரில் உள்ள கோவிலுக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த சீனிவாசன் வயது 51 மற்றும் அவரது தங்கை நிவேதா 45 ஆகிய இருவரும் சரிந்து விழுந்த கன்டெய்னர் பெட்டியின் உட்புறமாக சிக்கிக் கொண்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

இருவரின் உடலை மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து, கன்டெய்னர் லாரி ஓட்டுநர் பண்டார வேலன் வயது 38 என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!