திருவொற்றியூர் அருகே மழைநீர் வடிகால் அமைக்க ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவொற்றியூர் அருகே மழைநீர் வடிகால் அமைக்க ஆக்கிரமிப்புகள் அகற்றம்
X

எண்ணூர் அன்னை சிவகாமி நகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக சாலை ஓரம் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி ஊழியர்கள் கொண்டு அதிகாரிகள் அகற்றினர்,

திருவொற்றியூர் அருகே மழைநீர் வடிகால் அமைக்க ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.

சென்னை திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட , மூன்றாவது வார்டுக்குட்பட்ட, அன்னை சிவகாமி நகர் - எண்ணூர் விரைவு சாலையோரம், மழைநீர் வடிகால் அமைக்க வேண்டியுள்ளது.

அதற்கு, இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில், மாநகராட்சி அதிகாரிகள், ஈடுபட்டனர். செயற்பொறியாளர் பால்தங்கதுரை, உதவி செயற்பொறியாளர் ஜெயகுமார், உதவி பொறியாளர் சரவணன் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள், ஜே.சி.பி., இயந்திரங்கள் உதவியுடன் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.

அங்கு அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதுவரை பத்துக்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்ட நிலையில், 26 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!