சென்னை மாநகராட்சி மண்டல குழு தலைவர்களின் அலுவலகங்கள் திறப்பு
சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல குழு அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் இரண்டு மண்டலங்களில் உள்ள சென்னை மாநகராட்சியில் தேர்தல் நடத்தப்பட்ட பின் மண்டல குழு தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான அலுவலகங்கள் மண்டல அலுவலகங்கள் ஒதுக்கப்பட்டு அவற்றின் திறப்பு விழா நடைபெற்று
திருவொற்றியூர் மணலி மண்டல அலுவலகத்தில் திருவெற்றியூர் மண்டலக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள தி.மு.தனியரசுக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ சால்வை அணிந்து இருக்கையில் அமர வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுநல அமைப்பினர் மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதேபோன்று மணலி மண்டல குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஏ. வி. ஆறுமுகம் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. மண்டல அலுவலகத்தை வடசென்னை எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமி, மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu