பள்ளி மாணவனை மர்ம நபர் வெட்டிய சம்பவம்: புது வண்ணாரப்பேட்டையில் பரபரப்பு

பள்ளி மாணவனை மர்ம நபர் வெட்டிய சம்பவம்: புது வண்ணாரப்பேட்டையில் பரபரப்பு
X

பைல் படம்.

பள்ளி மாணவனை மர்ம நபர் வெட்டிய சம்பவம் புது வண்ணாரப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருவெற்றியூர் அடுத்த புதுவண்ணாரப்பேட்டை தேசிய நகரைச் சேர்ந்தவர் கவியரசன் திமுக பிரமுகர் இவரது மகன் பார்த்தீபன் (17) அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் காற்றுக்காக வீட்டு வாசலில் படுத்து உறங்கிய போது நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் பார்த்தீபனை கத்தியால் தலையில் நான்கு இடங்களில் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளார்.

முகம் முழுவதும் வெட்டுப்பட்ட நிலையில் மயக்கத்தில் இருந்தவரை அதிகாலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து விட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் பார்த்திபனை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த சம்பவம் குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.மேலும் மர்ம நபர் வேறு ஒருவரை கொலை செய்ய வந்து தவறுதலாக பார்த்தீபன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனரா அல்லது மாணவர்களிடையே ஏற்பட்ட முன்விரோதத்தினால் இந்த தாக்குதல் நடைபெற்றதா என்ற பல்வேறு கோணங்களில் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்