திருவொற்றியூர் சுங்கச்சாவடியில் இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவொற்றியூர் சுங்கச்சாவடியில் இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
X

 திருவொற்றியூரில்  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்.

திருவொற்றியூர் சுங்கச்சாவடியில் இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதித்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 1000க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஆண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

செரியன் நகர் மற்றும் தாங்கல் பள்ளிவாசல் நிர்வாகத்தை சார்ந்த ஒட்டுமொத்த இஸ்லாமிய அமைப்புகளும் ஒன்று சேர்ந்து இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது. இதனால் காவல் துறை சார்பாக போக்குவரத்து சிறிது நேரம் மாற்றம் செய்யப்பட்டது.

அப்போது அனைத்து பெண்களும் தலையில் ஹிஜாப் அணிந்து வந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதில் கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதித்ததை கண்டித்து இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், மத்திய அரசு இஸ்லாமியர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், முதலில் சிஏஏ சட்டத்தை கொண்டு வந்தது சட்டத்தை காலில் போட்டு மிதித்து கொண்டிருப்பதாகவும், இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலத்தை பிடுங்கி வேறு மதத்தினரிடம் கொடுத்ததாகவும், ஒருமாநிலத்தை மூன்றாகப் பிரித்து யூனியனாக மாற்றினார்கள் தற்போது மத உரிமையை பரிக்கும் விதமாக பெண்களின் கல்வியை முடக்கும் விதமாக பள்ளி கல்லூரி பெண் மாணவர்கள் ஹிஜாப் அணிவதை தடை செய்வதாக குற்றம் சாட்டினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!