சென்னை திருவொற்றியூரில் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்க கூட்டம்

சென்னை திருவொற்றியூரில் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்க கூட்டம்
X

சென்னை திருவொற்றியூரில் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்க கூட்டம் நடந்தது.

சென்னை திருவொற்றியூரில் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்க கூட்டம் நடந்தது.

திருவொற்றியூரில் உள்ள தனியார் திருமணம் மண்டபத்தில் தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கம் மற்றும் தியாகி விஸ்வநாததாஸ் நகர் குடியிருப்பு நலசங்கத்தின் 25ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சங்கத்தின் தலைவர் அழகிரி தலைமையில் செயலாளர் கார்த்திக் ஏற்பாட்டில் மருத்துவ முகாம், இலவச சட்ட ஆலோசனை முகாம் மற்றும் தொழிலாளர்களுக்கு சலுகை விலையில் பொருட்கள் வாங்குவதற்கு ஏற்பாடு செய்யப் பட்டது.

நலிந்த முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு இலவசகருவி வழங்க வேண்டும், மிகவும் பிற்பட்ட சமூகத்தில்உள்ள முடித்திருத்தும் தொழிலாளர்கள் பிள்ளைகள் படித்தவர்களுக்கு ஒதுக்கீடு வேலை, மருத்துவம், இன்ஜினீயரிங் துறையில் வேலை வாய்ப்பு, மிகவும் பிற்பட்ட சமூகத்தில் 5சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும்., ஏழை மூடித்திருத்தும் தொழிலாளர் நவீன முறையில் பியூட்டி பார்லர் கடை அமைத்து கொள்ள வங்கி மூலம் கடன் வழங்க வேண்டும் என சங்கத்தின் சார்பில்12அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!