முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத் திறப்பு விழா: குடியரசு தலைவர் திறந்து வைக்கிறார்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத் திறப்பு விழா: குடியரசு தலைவர் திறந்து வைக்கிறார்
X

பைல் படம்

தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி திரு உருவ படத்தை குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் திறந்து வைக்கிறார் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2 கருணாநிதியின் உருவப்படம் திறந்து வைக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சபாநாயகர் அப்பாவு;

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் ஆகஸ்ட் 2 திறக்கப்படும். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆகஸ்ட் 2 மாலை 5 மணிக்கு சட்டப்பேரவையில் கருணாநிதி படத்தை திறந்து வைக்கிறார்.

படத்திறப்பு விழாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் தலைமை தாங்குகிறார்; முதல்வர் ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவிலும் குடியரசு தலைவர் பங்கேற்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பாகுபாடு இன்றி அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும். சட்டப்பேரவை செயலகம் மூலம் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற பணிகள் நடைபெறுகிறது எனவும் கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!