திருவொற்றியூர்: படகுகளுக்கு பயன்படுத்தும் ஏணி குடோனில் தீ விபத்து
தீ விபத்தில் எரிந்த ஏணிகள்.
சென்னை திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலை, ஒண்டிகுப்பம் அருகே மணி பாரதி வயது 26 என்ற மீனவ இளைஞர் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் படகுகளுக்கு பைபர் படகுகளுக்காக மேல் தளத்திற்கு செல்வதற்கு ஏணி தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.
இவர் திறந்தவெளியில் ஏணிகளை தயார் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சிகரெட் பிடித்து விட்டு அப்படியே போட்டு விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சிறியதாக பற்றிய தீ மளமளவென கொழுந்துவிட்டு பற்றி எரியத் தொடங்கியது. அருகில் இருந்த போக்குவரத்து காவல்துறையினர் உடனடியாக தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu