தியாகராஜ சுவாமி கோயிலில் கொரோனா தடுப்பூசி முகாம்

தியாகராஜ சுவாமி கோயிலில் கொரோனா தடுப்பூசி முகாம்
X
சென்னை தியாகராஜர் கோயிலில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

சென்னை, திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் Covid-19 நோய் தொற்றுக்கான தடுப்பூசி முகாம் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரையிலான 3நாட்களுக்கு காலை 9 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறுகிறது.

இதன் துவக்கமாக நேற்று காலை 9 மணிக்கு முகாம் துவங்கப்பட்டது. இந்த முகாமில் கோயில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு Covid-19 தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவது முடுக்கிவிடப்பட்டுள்ளது. வயது பிரிவு அடிப்படையில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!