மக்களின் தேவை குறித்து திருவொற்றியூர் 6வது வார்டு கவுன்சிலர் ஆய்வு

6,வது வார்டு உறுப்பினர் சாமுவேல் திரவியம், வார்டு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
சென்னை திருவொற்றியூர் ஆறாவது வார்டு கவுன்சிலர் எம் சாமுவேல் திரவியம், தனது வார்டில் சென்று ஆய்வை மேற்கொண்டார். அப்போது, கால்வாயில் குப்பைகள் கொட்டப்பட்ட அதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி இரவு நேரங்களில் மக்கள் தூங்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருவதை கண்டார்.
மேலும், தெரு விளக்குகள் எதுவும் இல்லாதது, இதனால் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் திறந்த நிலையில் உள்ள கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளாவது குறித்து, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று விரைவில் மக்கள் குறைகளை தீர்க்கப்படும் என, அவர் உறுதி அளித்தார்.
இந்த நிகழ்வின்போது, எம் சி ஆர் வட்ட திமுக செயலாளர் கண்ணன், பகுதி காங்கிரஸ் தலைவர் ஏபி ஆறுமுகம், திருவொற்றியூர் காங்கிரஸ் பொறுப்பாளர் கேபி துறை .மற்றும் நிர்வாகிகள் வாசு, கலையரசன் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu