திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் கடைகளை அகற்றி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் கடைகளை அகற்றி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
X

திருவொற்றியூரில் நகர்ப்புற நலவாழ்வு மையம் அமைப்பதற்காக கடைகளை இடித்து அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை முற்றுகை போராட்டம் நடத்திய வியாபாரிக

திருவொற்றியூரில் நகர்ப்புற நலவாழ்வு மையம் அமைப்பதற்காக கடைகளை இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் முற்றுகை

திருவொற்றியூரில் நகர்ப்புற நலவாழ்வு மையம் அமைப்பதற்காக கடைகளை இடித்து அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை முற்றுகை போராட்டம் நடத்திய வியாபாரிகள்.

நகர்ப்புற நலவாழ்வு மையம் அமைப்பதற்காக திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் இருந்த 24 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

திருவொற்றியூர் மார்க்கெட் தெரு பகுதியில் மளிகை பொருள்கள், காய்கறி, பழங்கள், மீன் உள்ளிட்டவைகளை விற்பனை செய்யும் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இதற்காக ஒப்பந்ததாரர் மூலம் மாநகராட்சி வாடகை கட்டணம் வசூலித்து வருகிறது. இப்பகுதியில் மாநகராட்சி சார்பில் ரூ.29 லட்சம் செலவில் நகர்ப்புர நலவாழ்வு மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு இதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இத்திட்டத்திற்கு இந்த இடத்தில் கடைகளை நடத்தி வந்த வியாபாரிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருப்பினும் நலவாழ்வு மையம் அமைக்கப்பட உள்ள இடத்தில் இருந்த 24 கடைகளை இடித்து அகற்றும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை தொடங்கினர்.

வியாபாரிகள் எதிர்ப்பு:கடைகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி வியாபாரிகள் மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடைகளை இடிக்கும் பணி தாற்காலிக நிறுத்தி வைக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்து மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு போராட்டம் நடத்திய வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இப்பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகம் மிகவும் பழைமையானது. இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த கட்டடத்தை இடித்து விட்டு சுமார் 350 கடைகள் அடங்கிய வணிக வளாகக் கட்டடம் மாநகராட்சி சார்பில் விரைவில் அமைக்கப்பட உள்ளது.

அப்போது தற்போது கடைகளை இழந்துள்ள வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் வழங்கப்படும். நகர் நலவாழ்வு மையம் அமைக்கப்பட வேண்டியதில் இப்பகுதி பொதுமக்களின் அடிப்படை தேவையாக உள்ளது எனத் தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட வியாபாரிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் 24 கடைகளும் இடித்து அகற்றப்பட்டது.

National Health Mission: சென்னையில் 140 நகர்ப்புற சுகாதார மையங்கள் அமைக்க திட்டம் சென்னை மாநகராட்சிக்கு மொத்தம் 140 நகர்ப்புற சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்கள் (Urban Health and Wellness Centres) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதை தவிர, 40 பாலிகிளினிக், நான்கு பொது சுகாதார ஆய்வகம் ஆகியவற்றையும் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் ஒரு லட்சத்து 50 ஆயிரம் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையம் அமைக்க ஒன்றிய அரசால் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சென்னையில் மட்டும் 140 மையங்கள் அமைக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக 88 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், அடுத்த எட்டு மாதங்கள் முதல் ஒரு வருட காலத்திற்குள் இதற்கான பணிகள் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!