துப்புரவு பணியாளர்கள் வந்த வாகனம் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து

துப்புரவு பணியாளர்கள் வந்த வாகனம் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து
X

விபத்துக்குள்ளான வாகனம்.

சென்னையில் துப்புரவு பணியாளர்கள் வந்த வாகனம் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் ஓட்டுனர் காயம் அடைந்தார்.

திருவொற்றியூர் அடுத்த சாத்தாங்காடு காவல் நிலையம் அருகே சாலையில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த வாகனம் மீது வேகமாக வந்த லாரி மோதியது. இதில் துப்புரவு வாகன ஓட்டுனர் படுகாயமடைந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் வந்த சாத்தாங்காடு போலீசார் கன்டெய்னர் லாரி டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் படுகாயமடைந்த ஓட்டுநர் எண்ணூர் அன்னை சிவகாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் இதில் வாகனம் பின்பகுதியில் முழுவதும் சேதமடைந்த மேலும் இது சம்பந்தமாக ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டதில் தூக்க கலக்கத்தில் ஓட்டிக்கொண்டு வாகனம் மீது மோதியதாக கூறினார். ஆனால் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதங்கள் எதுவும் நடைபெறாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Tags

Next Story
ai marketing future