திருவொற்றியூர்: விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து பலி

திருவொற்றியூர்: விளையாடிக் கொண்டிருந்த  சிறுவன் மயங்கி விழுந்து பலி
X
தினேஷ் குமார் 
திருவொற்றியூர் அருகே, வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுவன் திடீரென மயங்கி விழுந்து பலியானது, சோகத்தை ஏற்படுத்தியது.

திருவொற்றியூர் அடுத்த வண்ணாரப்பேட்டை நரசய்யா தெருவை சேர்ந்தவர். கார்த்திக்; இவரது மனைவி செல்வசங்கரி இவர்களின் மகன் தினேஷ் குமார் (வயது 10). வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.

தந்தை கார்த்திக் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், தாய் செல்வசங்கரி அதே பள்ளியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்து, மகனை காப்பாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டு வாசலில் தினேஷ்குமார் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதைப்பார்த்த செல்வசங்கரி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு கொண்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தினேஷ்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்ட தாய் செல்வ சங்கரி கதறி அழுதார். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமார் திடீரென மயங்கி விழுந்து இறந்த காரணம், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும் என்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!