திருவொற்றியூரில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: மின்வாரிய அதிகாரி கைது

திருவொற்றியூரில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: மின்வாரிய அதிகாரி கைது
X

கைது செய்யப்பட்ட ராஜசேகரன்.

திருவொற்றியூரில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த மின்வாரிய அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை திருவொற்றியூர் நடராஜர் தோட்டம், 2வது தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். பெயிண்டிங் வேலை செய்து வருவம் இவரது மனைவி, சுகுமாரி வீட்டு வேலை செய்து வருகிறார். இவர்களது 14 வயது மகள் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

சென்னை மவுண்ட் ரோடில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் தணிக்கை அலுவலராக பணிபுரியும் ராஜசேகரன் என்பவரது வீட்டில் ரவிச்சந்திரன் குடியிருந்து வருகிறார்.

கடந்த 6 மாதத்திற்கு முன் சிறுமியை மொட்டை மாடியில் வைத்து ராஜசேகரன் ஏமாற்றி இரண்டு முறை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதனால் பயத்தில் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருந்ததாகவும், வயிற்று வலி ஏற்படவே தனது தாயாரிடம் கூறியுள்ளார்.

சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மருத்துவரிடம் பரிசோதித்த போது சிறுமி 6 மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக சிறுமியின் பெற்றோர் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து குற்றவாளியை போலீசார் தேடி வந்த நிலையில், தலைமறைவாக இருந்த ராஜசேகரனை, ஆய்வாளர் சீலா மேரி அவர்கள் தலைமையில் சென்ற போலீசார் மவுண்ட் ரோடில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வைத்து கைது செய்த போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய புழல் சிறையில் அடைத்தனர்.

வடசென்னையில் சில நாட்களாக சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்து வருவது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!