திருவொற்றியூர் வீட்டில் கேஸ் கசிவால் பரபரப்பு: விபத்து தவிர்ப்பு

திருவொற்றியூர் வீட்டில்  கேஸ் கசிவால் பரபரப்பு: விபத்து தவிர்ப்பு
X

கேஸ் கசிந்த சிலிண்டர். 

திருவொற்றியூரில், வீட்டில் கேஸ் கசிவு ஏற்பட்ட நிலையில் உடனடியாக தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து சரி செய்தனர்.

திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் வசிக்கும் சபீனா என்பவரது வீட்டில் திடீரென கேஸ் வெளியேறி வாசனை அடிக்க தொடங்கியது. இதை தொடர்ந்து வீடு முழுவதும் கேஸ் பரவி இருந்ததால் உடனடியாக தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தார்

தகவலின் அடிப்படையில் திருவொற்றியூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சிறப்பு நிலைய அலுவலர் வாசுதேவன் தலைமையில் வந்த தீயணைப்பு படை வீரர்கள் வீட்டினுள் இருந்த கேஸ் சிலிண்டரை பத்திரமாக மீட்டு வெளியில் எடுத்து கொண்டு வந்து விபத்து நேராமல் தவிர்த்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!