இனி ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் அளவு இவ்வளவு தான்..!

இனி ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் அளவு  இவ்வளவு தான்..!
X

தமிழகத்தில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும், அரசு இலவச அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், பருப்பு, பாமாயில் என பல பொருட்களை மலிவு விலையில் நியாய விலை கடையில் தமிழக அரசு கொடுத்து வருகிறது. இதற்கு மத்திய அரசு மானியம் வழங்கி வரும் நிலையில், தற்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணையின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி ரேஷன் கார்டு ஒன்றுக்கு, இரண்டு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கி வந்த நிலையில், தற்போது மத்திய அரசு அதனை குறைத்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை தமிழகத்திற்கு மத்திய அரசு அளித்து வந்த மண்ணெண்ணையை அளவு தற்போது 20 சதவீதமாக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் நுகர்வோருக்கு வழங்கப்பட வேண்டிய மண்ணெண்ணெய் அளவை குறைக்க வேண்டிய நிலை தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!