ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி
X

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 

குடலிறக்க சிகிச்சை முடித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை அமைந்த கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடலிறக்கம் காரணமாக அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முதலமைச்சர் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை தெரிவித்த நிலையில், ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிலையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு முன் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மூன்று நாட்கள் முழு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!