/* */

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முதல் மாநிலம் தமிழ்நாடு: அமைச்சர் தகவல்

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து நிபுணர்குழு ஆய்வு செய்கிறது. மத்தியஅரசு அனுமதித்தவுடன் பணிகள் தொடங்கும்

HIGHLIGHTS

இந்தியாவிலேயே குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கும் முதல் மாநிலம் தமிழ்நாடாக இருக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் அவர் மேலும் கூறியதாவது: இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 95 கோடிக்கும் மேற்பட்ட டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டிலும் முழு வீச்சில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் ஞாயிறுதோறும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. 5 கட்டமாக தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது . அதில் பல கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற முதல் மெகா தடுப்பூசி முகாமில் 28.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதேபோல செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற முகாமில் 16.43 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 26 மற்றும் அக்டோபர் 3 ஆகிய தேதிகளில் நடைபெற்ற 3ஆவது மற்றும் 4ஆவது மெகா தடுப்பூசி முகாம்களில் முறையே 25.04 லட்சம் மற்றும் 17.04 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 22,52,641 பயனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பண்டிகைக்காலம் என்பதால் வரும் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து நிபுணர் குழு ஆய்வு செய்துவருகிறது. ஒன்றிய அரசு அனுமதி அளித்ததுடன் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படும். இதன் மூலம் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கும் முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.



Updated On: 16 Oct 2021 6:47 AM GMT

Related News