மாற்றுக்கட்சியினர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

மாற்றுக்கட்சியினர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்
X

அதிமுகவை சேர்ந்த ராணிப்பேட்டை மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சாரதி தலைமையில் மாற்றுகட்சியினர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு மாற்றுக்கட்சிகளை சேர்ந்த பலர் திமுகவில் இணைந்தனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் பலர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

இதில் அதிமுகவை சேர்ந்த ராணிப்பேட்டை மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சாரதி தலைமையில் ஆற்காடு நகர மாவட்டபிரதிநிதி கண்ணன், இளைஞர் அணி செயலாளர், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், நாம் தமிழர் கட்சி முன்னாள் நகர செயலாளர் துரைமுருகன், தமிழக வாழ்வுரிமை கட்சி ஒன்றிய செயலாளர் உட்பட பலரும் அந்த கட்சிகளில் இருந்து விலகி முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.அப்போது திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உட்பட திமுக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!