இனி அரசு விழாவாக ராஜேந்திர சோழன் பிறந்தநாள்- முதல்வர் அறிவிப்பு

இனி அரசு விழாவாக ராஜேந்திர சோழன் பிறந்தநாள்- முதல்வர் அறிவிப்பு
X

பைல் படம்

ராஜேந்திர சோழன் பிறந்தநாள் இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வரலாற்றுப் புகழ்பெற்ற சோழ மன்னர் ராஜேந்திர சோழன் கங்கை வரை படையெடுத்துச் சென்று வென்றதன் அடையாளமாக அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்ட சோழபுரம் என்ற நகரை உருவாக்கி, பிரமாண்ட பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டினார். தமிழர்களின் கட்டிடக்கலையை பறைசாற்றும் வகையில் உலக அளவில் வரலாற்றுப் புகழ்பெற்ற இடமாக இது விளங்குகிறது.

ராஜேந்திர சோழனை கொண்டாடும் பொருட்டு, பிறந்த தினமான ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆண்டுதோறும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் பெருவிழா கொண்டாடப்படும்.

இந்நிலையில், ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தது.

கங்கை கொண்ட சோழபுரம் மக்களும், வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் வலியுறுத்தி வந்த நிலையில், தமிழக அரசு இந்த கோரிக்கையை ஏற்று, ஆண்டுதோறும் ராஜேந்திர சோழன் பிறந்த தினமான ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று அவரது பிறந்தநாள் இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil