நீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பாலான மக்களின் கருத்து, ஏ.கே.ராஜன் குழு அறிவிப்பு

X
ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் ( பைல் படம்)
By - C.Pandi, Reporter |9 July 2021 3:53 PM IST
நீட் தேர்வு குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவின் 4-வது கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.
சென்னை : நீட் தேர்வு குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவின் 4-வது கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஏ.கே.ராஜன் கூறியதாவது, மக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் படி பெரும்பாலானோர் நீட் தேர்வு வேண்டாம் என்றே கருத்துக் கூறியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் குழுவிற்கு தடை கோரி நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கில் உத்தரவு வந்த பின்னரே அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu