தடுப்பூசி உற்பத்தி குறைவா? 3வது அலையை தடுக்க முடியாது: மார்க்சிஸ்ட்
ஜி,ராமகிருஷ்ணன்.
டெல்லியில் விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து சென்னை தி. நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் கருப்புக் கொடி ஏற்றினர். அதனை தொடர்ந்து இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
முதலாவதாக பேசிய மாநில செயலாளர் பால கிருஷ்ணன் தெரிவிக்கையில், டெல்லி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஏறக்குறைய 400 பேருக்கு மேல் அந்த களத்தில் இறந்துள்ளார்கள். இன்னும் அவர்கள் போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது.
போராடும் விவசாயிகளின் குரலுக்கு செவி சாய்க்க கூட மோடியால் முடியவில்லை.1 கோடிக்கு மேற்பட்டவர்கள் இந்த கொராணாநோயினால் பதிக்கப்பட்டுள்ளார்கள். இறந்தவர்களை எரிக்க முடியாமல் கங்கை ஆற்றில் வீசும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
போதுமான அளவு மருந்து இல்லை, ஆக்சிஜன் இல்லை. எதுவுமே இல்லாத மோசமான ஆட்சியாக தான் மோடி அரசு உள்ளது என குற்றம் சாட்டினார். தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி வழங்காமல் ,குஜரத்திற்கு மட்டுமே வழங்கி வருகிறார். அவர் இந்தியாவிற்கு பிரதமரா அல்லது குஜரத்திற்கு பிரதமரா என கேள்வி எழுப்பினார்.
வேளாண் சட்டத்தினை ரத்து செய்ய நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தீர்மானம் நிறைவேற்றுவோம் என முதலமைச்சர் கூறினார்,நிச்சயம் அவர் செய்வார் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த அளவுக்கு நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது என்றால் அதற்கு அதிமுக தோல்வி தான் காரணம். எனவே எதிர் கட்சி எங்களை குற்றம் சாட்டுவது நியாயம் இல்லை என அவர் தெரிவித்தார்.
பத்ம சேஷாத்ரி பள்ளி முறைகேடு வன்மையான கண்டனத்திக்கு உரியது. அந்த பள்ளியில் நீண்ட காலமாக இது போன்ற சம்பவம் நடந்துள்ளது . நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பது அந்த நிர்வாகமும் உடந்தையாக உள்ளது என்பது தான் எங்கள் குற்றச்சாட்டு. பாஜக செய்தி தொடர்பாளர் நயரணன் திருப்பதி வயது வரம்பை குறைக்க வேண்டும் என கூறியதற்கு பதில் அளித்த பால கிருஷ்ணன்,
வயது வரம்பிற்கு இதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்றும் . பாஜக சம்மந்தம் இல்லாமல் இது போன்று பேசி வருகிறார்கள்.2வது அலை காரணமாக 1லட்சத்தி40 ஆயிரம் பேர் அரசு கணக்கின்படி இறந்துள்ளார்கள். தடுப்பூசி பொறுத்தவரை மத்திய அரசாங்கம் மாநில அரசிற்கு தேவையான மருந்துகளை கொடுக்கவில்லை. போதுமான உற்பத்தி இல்லை என்றால் மூன்றாம் அலை வருவதை தடுத்து நிறுத்த முடியாது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu