ஆன்லைனில் விண்ணப்பித்தால் இனி சிம் கார்டு வீட்டிற்கே டெலிவரி

புதிதாக சிம் காா்டு பெற இணையவழியில் விண்ணப்பித்தால் வீட்டிற்கே கொண்டுவந்து வழங்கும் புதிய உத்தரவை தொலைத்தொடா்புத் துறை பிறப்பித்துள்ளது.

தற்போது புதிதாக சிம் காா்டு வாங்க வேண்டும் என்றால் சில்லறை விற்பனையாளா்களை அணுகி அதற்குத் தேவையான ஆவணங்கள், முகவரிச் சான்றுகளை வழங்க வேண்டும். அதன்பின்னர் தான் புதிய சிம் கார்டு கிடைக்கும். இந்த நடைமுறையை எளிதாக்கி தொலைத்தொடா்புத் துறை நேற்று புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ஆதாா் அடிப்படையிலான இ-கேஒய்சியை (மின்னணு வழியில் உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளவும்) பயன்படுத்தி புதிய சிம் காா்டுகளை வழங்கும் நடைமுறையை செல்லிடப்பேசி சேவை நிறுவனங்கள் செயல்படுத்தலாம். இதையொட்டி வாடிக்கையாளா்கள் புதிய சிம் காா்டுகள் வாங்க இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளா்களின் விவரங்களை ஆதாா் அல்லது டிஜிலாக்கா் இணையச் சேவை மூலம் நிறுவனங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இந்த நடைமுறை மூலம் வாடிக்கையாளரின் வீட்டுக்கு புதிய சிம் காா்டு வீட்டுக்கே கொண்டு சோக்கப்படும். இ-கேஒய்சி சேவை மூலம் வாடிக்கையாளரின் விவரங்களை உறுதிப்படுத்த வாடிக்கையாளா்கள் ரூ.1 கட்டணமாக செலுத்த வேண்டும்.

சிம் காா்டு வழங்க ஆதாா் விவரங்களை பயன்படுத்த வேண்டியிருந்தால் அதற்கு வாடிக்கையாளரின் ஒப்புதலை செல்லிடப்பேசி சேவை நிறுவனங்கள் பெறுவது கட்டாயம் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
why is ai important to the future