முதல்வராக பொறுப்பேற்கும் மு.க ஸ்டாலினுக்கு சீமான் வாழ்த்து

முதல்வராக பொறுப்பேற்கும் மு.க ஸ்டாலினுக்கு சீமான் வாழ்த்து
X
தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ள மு.க. ஸ்டாலினுக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில், திமுக பெரும்பான்மை இடங்களை பெற்றது. இதையடுத்து, தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார். இந்த நிலையில், மு.க. ஸ்டாலினுக்கு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், ஸ்டாலினை வாழ்த்தி பதிவிட்டுள்ளார். அதில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவிருக்கும் திமுகவுக்கும், அதன் சட்டமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கும் மு.க. ஸ்டாலினுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!