வாரத்திற்கு இருமுறை மெகா தடுப்பூசி முகாம்: சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன்

வாரத்திற்கு இருமுறை மெகா தடுப்பூசி முகாம்: சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன்
X

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

463 பேர் டெங்கு காய்ச்சலுக்கு தற்போது வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் நோரா வைரஸ் பாதிப்பு இல்லை என்றார் அமைச்சர்

தமிழகத்தில் வியாழன் மற்றும் ஞாயிறு என வாரத்திற்கு இருமுறை இனி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்றார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

வீடு தேடி தடுப்பூசி திட்டத்தின் கீழ் இன்று மட்டும் 4,32,836தடுப்பூசி செலுத்தப்ப்பட்டுள்ளது. என்றும் 1.31 கோடியே தடுப்பூசிகள் இன்றைய நிலவரப்படி கையிருப்பில் உள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி அருமருந்தாக உள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டுவது வருத்தமாக உள்ளது என்றார்.

14 லட்சம் தொடங்கி 30 லட்சம் வரை மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இனி வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என வாரத்திற்கு இரண்டு நாள் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும். வரும் வியாழன் அன்று நாடு முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும்.பூஸ்டர் தடுப்பூசி போடுவது குறித்து இந்தியாவிற்கு எந்த ஒரு அறிவுறுத்தல்களும் இதுவரை உலக சுகாதார அமைப்பு இன்னும் கொடுக்கவில்லை.ஆனால் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 97.5 சதவீதம் பாதுகாப்போடு உள்ளனர். 463 பேர் டெங்கு காய்ச்சளுக்கு தற்போது வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் நோரா வைரஸ் பாதிப்பு இல்லை என்றார் அமைச்சர் மா சுப்பிரமணியன்.

இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:70 லட்சம் நபர்கள் இரண்டாம் தவணை செலுத்தி கொள்ளாதது, உள்ளாட்சி அமைப்புகளோ தொண்டு நிறுவனங்களோ அல்லது மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் தவறு கிடையாது.பொதுமக்கள் முன்வந்து உணர்ந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தயவு செய்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!