டெண்டர் முறைகேடு : முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான வழக்கு ஒத்திவைப்பு

டெண்டர் முறைகேடு : முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான வழக்கு ஒத்திவைப்பு
X

முன்னாள் அமைச்சர் வேலுமணி, (பைல் படம்)

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கை 4 வார காலத்திற்கு ஒத்திவைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கையை ஏற்காத உயர் நீதிமன்றம் விரிவான விசாரணைக்காக ஒத்தி வைப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வழக்கினை நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க கோரி திமுக அமைப்புச் செயலாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்