தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் காவல்துறையினர் இன்று திடீர் சோதனை

தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் காவல்துறையினர் இன்று திடீர் சோதனை
X

பைல் படம்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு மத்திய சிறைகளில் இன்று ஒரே நேரத்தில் காவல்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

மத்திய சிறைகளில் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள், கஞ்சா, செல்போன்கள் தாராளமாக புழங்குவதாக வந்த தகவலை அடுத்து காவல்துறையினர் தமிழகம் முழுவதும் ஒரேநேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக சென்னை புழல் மத்திய சிறையில் மாதவரம் துணை ஆணையர் சுந்தரவதனம் தலைமையில் சுமார் 100 காவலர்கள் சோதனையில் ஈடுபட்டடுள்ளனர். மத்திய சிறைகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் புழங்குவதோடு பல்வேறு சமூக விரோத செயல்களும் நடப்பதாக வந்த தகவலை அடுத்து இந்த சோதனை நடப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!