வன்னியர் உள்ஒதுக்கீடு பின்பற்றப்படுவது குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் பரபரப்பு பேட்டி
அமைச்சர் மா.சுப்ரமணியன்
நவம்பர் 14ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் முகாம்களில் 8-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.
வீடு தேடி தடுப்பூசி திட்டத்தின் கீழ் பட்டினப்பாக்கம் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தடுப்பூசி செலுத்துவதில் ஒருவரை கூட தவறவிட்டுவிட கூடாது என முதலமைச்சர் அறிவுறுத்தியதின் பேரில் வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 65 லட்சம் பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர் . இதுவரை முதல் தவனை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளவர்களை கண்டறியப்பட்டு வீடு தேடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவித்தார்.
10 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா தொற்று 30 ஆயிரத்தை கடந்து அதிகரித்து வருகிறது. உலகம் முழுவது பெரிய அளவிலான அச்சுறுத்தல் தொடங்கியுள்ள சூழலில் தடுப்பூசி செலுத்திக்கொள்வது முக்கியம் என வலியுறுத்திய அவர், நவம்பர் 14ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் முகாம்களில் 8-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.
மேலும், வக்காளர் பெயர் பட்டியலில் தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும். தொழில்நுட்ப கோளாறு காரணமாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு வழங்கும் சான்றிதழில் குளறுபடி ஏற்பட்டுள்ளது விரைவில் சரி செய்யப்படும். தவறு நடைபெற்றிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
மருத்துவ கலந்தாய்வில் வன்னியர் உள்ஒதுக்கீடு பின்பற்றப்படுவது குறித்து அரசு தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களுக்கு பின்னர் இதுகுறித்து முடிவெடுத்து மருத்துவ கல்லூரி சேர்க்கை கலந்தாய்வு தொடங்கப்படும். நவம்பர் இறுதிக்குள் 100% தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என்ற இலக்கில் செயல்ப்பட்டு வருகிறோம்.
குட்கா பான் விற்பனை செய்த 10க்கும் மேற்பட்டவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பான் குட்கா விற்பனை நடைபெற்றால் பொதுமக்கள் தகவல் கொடுக்க வேண்டும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ கலந்தாய்வு குறித்து இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும். தமிழ்நாட்டில் இதுவரை 450 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu